2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்தி்ட்டத்தை தயாரிக்கும் செயற்பாட்டில் பொதுமக்களின் கருத்துக்களையும் அறிந்து கொளளும் நடவடிக்கையினை மாகாண நிதியமைச்சரான கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் முன்னெடுத்து வருகின்றார்
இதனடிப்படையில் ஒரு கட்டமாக நேற்று கல் குடா தொகுதிக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண முதலமைச்சர் அந்த பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார். ஓட்டமாவடி ,வாழைச்சேனை ,பிறைந்துறைச்சேனை மட்டுமன்றி கல்மடு வெல்லவாடி பகுதியிலுள்ள பெரும்பான்மை சகோதார மொழி பேசும் மக்களின் கருத்துக்களையும் அறிந்து கொண்டமை சுட்டிக்காட்டக்கத்தக்கது
இதன் போது தமது பகுதிகளி்ல் உள்ள பல பிரச்சினைகளை மக்கள் முதலமைச்சரிடம் தெரிவித்ததுடன் அந்த மக்கள் நன்மை பெறும் விதத்திலான பல திட்டங்களை எதிர்வரும் மாகாண வரவு செலவுத்திட்டத்தினூடாக நடைமுறைப்படுத்தவு்ளளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்