ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாட் நிஸாம்டீனின் நிதி ஒதுக்கீட்டில் இலவச மூக்குக் காண்ணாடி வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (26) முற்பகல் கட்சியின் தாரூஸ்ஸலாம் தலைமையகத்தில் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கமைய முதற்கட்டமாக இலவச மூக்குக் கண்ணாடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாட் நிஸாம்டீன் தெரிவித்தார்.
இதன்மூலம் சுமார் 300 பேர் நன்மையடைவதாகவும், இதற்கென தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார். இதன் இரண்டாம் கட்ட நகர்வை மாளிகாவத்தை, கொலன்னாவ, தெமடக்கொட என்பன உட்பட கொழும்பிலுள்ள அனைத்து பிரதேசங்களிலும் நடாத்தத் தீர்மானித்துள்ளதாகவும் மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாட் நிஸாம்டீன் மேலும் கூறினார். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் கொழும்பு பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் உட்பட பலர் பங்குபற்றினர்.