மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக முதல்வர் வேகமாக குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் நாஞ்சில் சம்பத் ஆகியோர் கூறுகையில், மக்களின் ஏகோபித்த பிரார்த்தனை காரணமாகவும், சிறப்பான மருத்துவ சிகிச்சை காரணமாகவும் முதல்வர் நலமடைந்து வருகிறார்.
விரைவில் குணமடைந்து, வீடு திரும்புவார், நாட்டுப் பணியாற்றுவார் என்று கூறியுள்ளனர்.
லண்டனைச் சேர்ந்த நுரையீரல் தொற்றுநோய் சிகிச்சை நிபுணர் ரிச்சர்ட் பேல் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கடந்த இரு நாட்களாக சிங்கப்பூரை சேர்ந்த இரண்டு பெண் பிசியோதெரபிஸ்ட் நிபுணர்களும் சிகிச்சை அளித்துவருகின்றனர்.