ஜெயலலிதா பற்றி புதிய அப்டேட்...!

உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா விரைவாக குணமடைந்து வருவதாகவும், இன்று அவர் ஒருசில வார்த்தை பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் (செப்டம்பர்) 22–ந் தேதி இரவு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவர் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு டாக்டர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கு இடையே, கடந்த மாதம் 30–ந் தேதி லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலேவும் சென்னை வந்து முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை மேற்கொண்டார்.

தொடர்ந்து, டெல்லி ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழுவும் அவருடன் வந்து இணைந்து கொண்டு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது. டாக்டர்களின் தொடர் சிகிச்சையால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

தொடர்ந்து, அவருக்கு நுரையீரல் தொற்று பாதிப்பை நீக்கவும், சீரான சுவாசம் மேற்கொள்ளவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஊட்டச்சத்து, பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளும் அவருக்கு வழங்கப்படுகிறது. நீண்ட நாட்களாக அவர் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்று அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், நேற்று 18–வது நாளாக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் உடல் நிலையை தொடர்ந்து டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, டெல்லி ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரி டாக்டர்கள் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றனர்.

அவரை தொடர்ந்து, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலேவும் நேற்று காலை புறப்பட்டு சென்றார். அவர் இன்னும் ஒரு சில தினங்களில் மீண்டும் சென்னை வந்து முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையை தொடருவார் என தெரிகிறது.

அதே நேரத்தில், டெல்லி ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரி டாக்டர்களில் ஒருவரான கில்நானி நேற்று இரவு 9 மணிக்கு சென்னை வந்தார். அவர் தொடர்ந்து, ஜெயலலிதாவின் உடல்நிலையை கண்காணித்து வருகிறார். இவ்வாறு சிகிச்சை ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், மற்றொரு பக்கம் அரசியல் கட்சி தலைவர்களும், ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து தெரிந்து கொள்வதற்காக தினமும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இன்றும் பல அரசியல் தலைவர்கள் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்தனர். புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி அப்பல்லோ ஆஸ்பத்திரி வந்தார். அங்கு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்கள் குழுவிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது முதலமைச்சர் விரைவில் பூரண குணமடைவார் என்றார்.

இது போல் கேரள முதலமைச்சர் பிரணாய் ராய் விஜயன், கவர்னர் சதாசிவம், ஆகியோர் இன்று சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து அப்பல்லோ மருத்துவமனை வந்தனர். அங்கு முதலமைச்சர் உடல் நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.

இந்த நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும். அவர் ஒரு சில வார்த்தைகள் பேசியதாகவும் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -