றிப்கான் பதியுதீனின் முயற்சியில் அபிவிருத்தி கானும் மன்னார் பெரியமடு கிராமம்..!

மாணவர்களின் கல்வி மற்றும் சுகாதாரம் போன்றவற்றை கருத்திற்கொண்டு இன்றயதினம் பெரியமடு G.M.M.S கலவன் பாடசாலைக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தளபாடம் மற்றும் ஒலிபெருக்கி போன்றவை பாடசாலை அதிபரிடத்தில் கையளிக்கப்பட்டது. 

இதன்போது நிகழ்வில் உரையாற்றிய றிப்கான் பதியுதீன் அவர்கள் :-

"பெரியமேடு” கிராமமானது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிராமமாகும் அன்று இக்கிராமத்திலிருந்து வெளியேறிய எமது முஸ்லீம் சமூகம் தற்போது நிலவும் நல்லாட்சியில் மீண்டும் இந்த கிராமத்திற்கு மீள்குடியேறி வருகின்றனர். 

இவ்வாறு மீள்குடியேறிய மக்களுக்கு எமது கெளரவ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் பாரிய அபிவிருத்தி திட்டங்களை செய்துவருகின்றார். அதே போன்று இன்று வடமாகாண சபை உறுப்பினராக இருக்கும் நான் இப் பகுதியில் வாழுகின்ற மக்களுக்காகவும் இங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்காகவும் அவசியமான திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

குறிப்பாக இக் கிராமத்தின் போடப்படும் வீதியாக இருந்தாலும் சரி, வீடுகளாக இருந்தாலும் சரி, வைத்தியசாலை கட்டிடமாக இருந்தாலும் சரி, அது எம்மால் வழங்கப்பட்டது என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. அதுமட்டுமன்றி புதிதாக குடியேறிய மக்கள் தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள கிணறுகள், குழாய்க் கிணறுகள் போன்றவற்றை வழங்கி வைத்துள்ளோம். அதுபோன்று சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் நோக்கோடு சுத்திகரிக்கப்பட்ட நீரை மக்களுக்கு வழங்கியுள்ளோம். காரணம் வீண் புகழாரத்திற்கோ அல்லது அரசியல் இலாபத்திற்கோ அல்ல இதுவரை எமது சமூகம் பட்ட துன்பங்கள் இனியும் இருக்கக்கூடாது என்பதற்காகவே தவிர வேரு எதற்கும் இல்லை.

மேலும் இன்றய தினம் இப் பாடசாலைக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தாங்கி, தளபாடம் மற்றும் ஒலிபெருக்கி போன்றவற்றை வழங்குவதில் சந்தோஷமடைகின்றேன். மேலும் இந்த பாடசாலைக்கு மற்றும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கட்டம் கட்டமாக செய்து தருவோம் என குறிப்பிட்டார்.

மேலும் இன் நிகழ்வில் அமைச்சரின் இணைப்புச்செயலாளர் முஜாஹிர் மற்றும் வலயக்கல்வி பாலர் பாடசாலை பொறுப்பதிகாரி மற்றும் கிராம வாசிகள் இளைஞர் கழகங்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -