மலையக மக்களின் அரசியல் உரிமைக்கு புதிய அரசியல் யாப்பில் ஒத்த கருத்து, ஒருமித்த கருத்து ஒரே இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதே ஜனநாயகத்திற்கான மலையக அமைப்புகளின் (Malayaha Organizations for Democracy – MOD) இலக்கும், கோரிக்கையும் ஆகும் என மலையகத்திற்கான ஜனநாயக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.விஜேசந்திரன் தெரிவித்தார்.
புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்கு மலையக தமிழர்களின் அரசியல் உரிமைகள் மற்றும் அதிகார பேரளிப்பு குறித்து ஜனநாயகத்திற்கான மலையக அமைப்புகளின் கருத்து வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பு 23.10.2016 அன்று அட்டன் டைன் விடுதி மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுக்கு கருத்துரைக்கும் பொழுது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துரைத்தாவது,
மலையக வாழ் தமிழர்கள் ஏறக்குறைய 200 வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய ஆட்சியாளர்களால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு கடல் மட்டத்திலிருந்து மூவாயிரம் அடிக்கும் மேற்பட்ட அடர்ந்த மலைக்காடுகளில் குடியமர்த்தப்பட்டனர்.
இந்த நாட்டின் பொருளாதாரத்தையும் ஏற்றுமதி வருமானத்தையும் ஈட்டி தந்துள்ளதோடு இவர்கள் வீதிகள், புகையிரத பாதைகள், பாலங்கள், சுரங்கங்கள், துறைமுகங்கள் போன்ற இன்னோரான பொருளதார கட்டுமானங்களுக்கான 8 தலைமுறை அர்ப்பணித்துள்ளனர். இதனை யாவரும் மறந்துவிட முடியாது.
இந்த நாட்டில் 1.6 மில்லியன் சனதொகையை கொண்டு இலங்கை முழுவதும் பரந்து வாழும் இந்த வம்சாவளி தமிழ் மக்கள் மொத்த சனத்தொகையில் 7.4 வீதமாக திகழ்கின்றனர்.
நுவரெலியா, பதுளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களில் செறிவாகவும் ஏனைய மாவட்டங்களில் பரந்தளவிலும் ஒரு சமூகமாக வாழ்ந்து வருகின்ற மக்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர்கள் மற்றும் மூஸ்லிம் மக்களுக்க சமமாக வாழும் உரிய தனித்துவமிக்க கலாச்சார பண்பாடு அம்சங்களை இம்மக்கள் கொண்டுள்ளனர்.
நாட்டின் தேசிய நீரோட்டத்திலிருந்து முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ள இம்மக்களை ஏனைய சமூகங்களோடு ஒப்பிடுகையில் பாரிய அரசியல் சமூக பொருளாதார கலாச்சார பின்னடைவுகளுக்கு உள்ளாகி உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
1931ஆம் ஆண்டு முதல் எந்தவொரு அரசியல் உரிமைகள் அற்ற ரீதியில் வாழ்ந்து வருகின்ற மலையக தமிழர்க்ள மூன்றாவது முறையான அரசியல் சீர்திருத்தத்திற்கு முகம் கொடுக்கும் சந்தர்ப்பத்தினை சந்தித்துள்ளனர்.
இந்த நிலையில் 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அவர்களின் அரசியல் மற்றும் உரிமைகள் தொடர்பில் மேலொங்க எமது ஜனநாயகத்திற்கான மலையக அமைப்பு அரசியல் பேதமற்ற அனைத்து அமைப்புகளையும் ஒன்றிணைத்து பொறிமுறை ஒன்றினை அரசாங்கத்திற்கு கையளித்துள்ளது.
இதனடிப்படையில் அரசியல் உரிமைகள் மற்றும் அதிகார உரிமைகள், பிரதேச உரிமைகள், காணி உரிமைகள், வீடு மற்றும் கல்வி உரிமைகள் பொன்றவற்றில் நாட்டின் ஏனைய சமூகங்களுக்கு ஈடாக பகிர்ந்தளிப்பு செய்யப்பட வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக கொண்டு வரலாற்றில் இழக்கப்பட்ட உரிமை பின்னடைவில் இருந்து இம்மக்களை காத்தருள்ள எமது அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை இந்த அமைப்பின் ஊடாக அனைத்து அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் உள்வாங்கப்பட்டு கோரிக்கை செயன்முறையை அரசுக்கு எடுத்துக்கூற அறிக்கைகள் அமைச்சர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம் ஆகியோருடன் ஏனைய தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மலையக மக்கள் மீது அக்கறை கொண்டுள்ள சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ள அதேவேளை அமைப்பில் அங்கம் வகிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதித்துவத்தையும் வேண்டுவதற்காக நாம் தயாராக இருப்பதாக இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டோரால் கருத்து தெரிவிக்கப்பட்டது.