ஏ.எஸ்.எம்.ஜாவித்-
இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்காததையிட்டும், முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங் கொண்டு வருதிலும் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து அமைதியான மாபெரும் கண்டனப் பேரணி ஒன்றினை றியாஸ் சாலி தமையிலான இஸ்லாமிய ஒருமைப்பாட்டு முன்னணி இன்று (28) வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து தெவட்டஹக பள்ளிவாசலுக்கு முன்பாக நடாத்தியது.
மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அசாத் சாலி, ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் பிமால் ரத்நாயக்க, முன்னாள் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் சராப்டீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அரசாங்கங்களுக்கு எதிராக தமது கண்டன சுலோகங்களுடன் கோசமிட்டனர்.
தற்போதைய தேசிய நல்லிணக்க அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு சிறுபான்மை மக்களான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளே தீர்மணித்துள்ளது. இந்த வகையில் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த வாக்குகள் இந்த கூட்டாட்சி அரசாங்கத்திற்கே வழங்கப்பட்டது. காரணம் முஸ்லிம் சமுகத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட ஏனைய விடயங்களிலும் நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்கே இந்த வகையில் முஸ்லிம்களின் முக்கிய பூமிகளில் ஒன்றாக பலஸ்தீன் விளங்குவதுடன் அங்குள்ள சுமார் மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொள்ளும் கொடுமைகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் யுனஸ்கோவில் இந்த அரசு வாக்களிக்காமையையிட்டு முழு முஸ்லிம் சமுகமும் ஆழ்ந்த கவலையில் இருப்பதுடன் இந்த அரசின் செயற்பாடு விடயத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அசாத் சாலி தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் :-
அரசாங்கம் வாக்களிக்காமைக்கு தெரிவித்த கருத்தினை உடநடியாக வாபஸ் பெறவேண்டும் இல்லா விட்டால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் பாரிய கர்த்தால் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்த அவர் முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங் கொண்டு வருவதை எதிர்த்ததுடன் இந்த நேரத்தில் இந்த அரக்கு இது தேவையா? ஏன்ற கௌ;வியைக் கேட்டதுடன் இந்நாட்டு மக்கள்களுக்கு பல்வேறு தேவைகள் இருக்கின்றன அதில் கவனஞ் செலுத்தி அதனை மேற்கொள்ள வேண்டிய தேவையே இருக்கின்றது என்றும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்ற நீதியரசர் சலீம் மர்சூக் தலைமையில் முஸ்லிம் விவாகம் மற்றும் தனியார் சட்டங்கள் தொடர்பான விடயங்கள் மேற்கொள்ளப்பட்டு அவை சமர்ப்பிக்கப்பட வேண்டிய தேவையே உள்ளது.
ஆனால் அதனை கைவிட்டு விட்டு தற்போது ஜி.எஸ்.பி வரிச்சலுகை இந்தச்சட்டத்தால் தாமதமாகின்றது என்ற பொய்யைக் கூறுகின்றது என்றும் முஸ்லிம்களின் பிரச்சினைகளை இவற்றுடன் தொடர்புபடுத்த வேண்டிய தேவை இல்லை என்றும் தனது கண்டனத்தை தெரிவித்தார்.