கமு/கமு/ அல்- ஹிலால் பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.பைஸல் தலைமையில் ஆசிரியர்களைக் கௌரவிப்பு நிகழ்வு கடந்த (18) செவ்வாய்க்கிழமை பாடசாலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். ஜலீல், கௌரவ அதிதியாக திருமதி ஜிஹானா அலிப், விசேட அதிதியாக ஆசிரிய ஆலோசகர் ஏ. சஹரூன், முஸ்லிம் பிரிவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் சக்காப், பிரதி அதிபர் திருமதி றிப்கா அன்ஸார், உதவி அதிபர் திருமதி ஆர். நுஸ்ரத்,பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரிய ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.