ஓய்வு பெற்ற ஆசிரியர் எஸ்.எல்.எம். பரீத் எழுதிய ’உடுநுவர ஹந்தெஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலை (1892-2015)’ எனும் வரலாற்று நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 09ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 9.30 மணிக்கு ஹந்தெஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் விநியோக வடிகாலமைப்பு அமைச்சருமான றவூப் ஹகீம் கலந்துகொள்ளவுள்ளதுடன் விசேட அதிதியாக மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் ஈ.பி.ரி.கே. ஏக்கநாயக்க பங்கேற்கவுள்ளார்.
ஹந்தெஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலையின் ஆரம்பம் முதல் தற்போதைய நிலை வரையான ஒரு வரலாற்று தொகுப்பாக எழுதப்பட்டுள்ள இந்நூலுக்கான ஆய்வுரையை பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்புவிடுக்கின்றனர்.
நுஸ்கி முக்தார்.