ஜனாதிபதியே தான் இராஜினாமா செய்ய நேரடியான காரணம்

ஜனாதிபதி வெளியிட்ட கருத்து தான் இராஜினாமா செய்ய நேரடியான காரணமாக அமைந்தது என இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் முதல் குடிமகன் தனது பணி மற்றும் சுயாதீன ஆணைக்குழுவின் பணிகள் குறித்து சந்தேகம் வெளியிட்ட பின்னர், பதவியில் தொடர்ந்தும் இருப்பது நியாயமானதல்ல எனவும் தான் நான்கு பக்கங்களை கொண்ட நீண்ட ராஜினாமா கடிதத்தை எழுதி விட்டு பதவி விலகியதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வங்கி கணக்கொன்று சம்பந்தமான தகவலை அவருக்கு வழங்கியதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன முதுகெலும்பில்லாத கோழைத்தமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்த சந்தர்ப்பத்திலும் வங்கி கணக்கு குறித்து முன்னாள் ஜனாதிபதியிடம் பேசியதில்லை.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சம்பந்தமான விசாரணைகளை மூடிமறைத்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களையும் தில்ருக்ஷி மறுத்துள்ளார்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் சம்பந்தமாகவும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை விசாரணைகளுக்காக பல முறை ஆணைக்குழுவிற்கு அழைத்துள்ளதுடன் விசாரணைகள் தொடர்ந்தும் நடந்து வருகிறது எனவும் தில்ருக்ஷி விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -