இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மூளை சாவு ஏற்பட்டது. அவர் கோமா நிலையில் இருப்பதும் உண்மையே வெளிநாட்டு மருத்துவர்களின் சிகிச்சையும் பலனளிக்காததை பொருட்டு இன்று அல்லது நாளை உயிரிழப்பு நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகையால் அ.தி.மு.க MP, MLA கூட்டம் அவசரம் அவசரமாக கூட்டபடுகிறது. அத்துடன் IAP, IPS அதிகாரிகளுடன் சிறிது நேரத்திற்கு முன்பு பேச்சுவார்த்தை தொடங்கியதாகவும் அதில் அடுத்துவரும் விஜயதசமி ஆயுதபூஜைகளில் பல தொழில் மற்றும் மக்களில் பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் எனவும் அடுத்துவரும் உள்ளாட்சி தேர்தல் பாதிக்கப்பட்டு ஆட்சி கலையும் எனவும் விவாதிக்க்பபட்டுள்ளது.
சட்ட ஒழுங்கை சரியாக பாதுகாக்கப்பட்ட பின்பு முறையான அறிவிப்பு வெளியிட முடிவு செய்துள்ளனர். இதில் 5 நாட்களுக்கு முன்பே டாக்டர்கள் கை விரித்துவிட்டது உண்மையே உயிர் இருந்தாலும் இனி அவரால் கண் முழுக்க முடியாது என்பதே கடவுள் விதித்த தீர்ப்பு..... இது ஓர் அதிகார பூர்வ செய்தி என சமூகவலைத்தளங்களில்இ இணையத்தில் வெளிவந்து மீண்டுமொரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட இச்செய்தி தொடர்பாக இம்போட்மிரர் செய்திப்பிரிவு எமது இந்தியச் செய்தியாளர் அஷோகனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது..
அம்மா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனை சிலர் வதந்தியாக்குகின்றனர். எனவே ஊடககங்கள் கூறுவது போன்று எதுவுமில்லை அவர் சுகமடைந்து விரைவில் வீடு திரும்புவார் என்று குறிப்பிட்டார்.