தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் ஆசிரியர் பற்றாக் குறையை நிவர்த்திசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம்..!

தெல்தோட்டை நிருபர்-
ண்டி கல்வி வலயத்துக்குற்பட்ட தெல்தோட்டை முஸ்லிம் மத்தியக் கல்லூரியில் நிலவும் ஆசிரியர் பற்றாக் குறையை நிவர்த்திசெய்யக் கோரி இன்று (திங்கட்கிழமை, 2016 ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி) கவணயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெவுள்ளதாக பாடசாலை அபிவிருத்திக் குழு தெரிவித்துள்ளது.

சுற்றுநிரூபத்திற்கமைய பாடசாலை மாணவர்களின் தொகைக்கேற்ப இப்பாடசாலையில் 53 ஆசிரியர்கள் கடமையாற்றவேண்டும் என்றும் தற்போது 43 ஆசிரியர்கள் மட்டுமே இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், கணிதம், விஞ்ஞானம் மற்றும் சித்திரம் ஆகிய பாடங்களுக்கான வெற்றிடங்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக நிரப்பப்படாமல் இருப்பதாக இருக்கிறது. அத்துடன் சிங்கள பாடத்திற்கான ஆசிரியர் வெற்றிடம் 15 வருடங்களுக்கு மேலாக பூர்திசெய்யப்படாதுள்ளது. அது மட்டுமன்றி உயர்தர மற்றும் சாதாரண தர வகுப்புகளுக்குரிய கணக்கீட்டுக்குக்கல்வி மற்றும் வணிகக் கல்வி ஆகிய பாடங்களுக்கான ஆசிரியகர் வெற்றிடங்களுகம் காணப்படுகின்றன என பாடசாலை அபிவிருத்தி குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இப்பாடசாலையிலிருந்து 12 ஆசிரியர்கள் ஒரே காலகட்டத்தில் இடமாற்றம் பெற்றனர். எனினும் அதற்கு பாதிலாக 7 ஆசிரியர்கள் மாத்திரமே நியமிக்கப்பட்டனர். இதன்போது எமது பாடசாலைக்கு மாணவர்களுக்கும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

அத்துடன் இப்பாடசாலையில் தொடர்ச்சியாக பரீட்சை பெறுபேறுகள் வீழ்ச்சியடைந்து வருகின்றனர். இதற்கான முழுப்பொறுப்பையும் கண்டி கல்வி வலயமும் மத்திய மாகாண கல்வி திணைக்களமுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். 

எமது குறைப்பாடுகள் குறித்து பல தடவைகள் மத்திய மாகாண முதலமைச்சு மற்றும் கல்வி திணைக்களத்தில் முறையிட்டும் எமக்கு எவ்வித பயனும் கிடைக்கவில்லை. அத்துடன் எமது பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் கல்வியமைச்சர் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு சென்றோம். எனினும் எமக்கு இதுவரையில் எவ்விதடமான திருப்திகரமான பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை இதனாலேயே நாம் இவ்வாறு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ள தீர்மானித்தோம் என தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் அபிவிருத்திக்குழு தெரித்தது. 

மாணவர்களுக்கு தொடர்ச்சியாக இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கு எதிராக பெற்றோர்கள் மற்றும் மாணவர்களினால் நடத்தப்படும் இவ்வார்ப்பாட்டத்திற்கு தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் மாணவிகள் சங்கம் ஆகியனவும் ஆதரவளிக்கும் என தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -