ஹாசிப் யாஸீன்-
விளையாட்டடுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் ஆலோசகராக ஓய்வுபெற்ற அம்பாறைமாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம்.ஏ.நபார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நியமனம் வழங்கும் நிகழ்வு பிரதி அமைச்சரின் சாய்ந்தமருது காரியாலயத்தில் நேற்று (18) செவ்வாய்க்கிழமைஇடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை ஸாஹிறா கல்லூரியின் முன்னாள் அதிபர் எம்.ஐ.எம்.இஸ்மாயில், பிரதி அமைச்சரின்இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ.பாவா, கல்முனை, அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டுஉத்தியோகத்தர் ஏ.எம்.எம்.றசீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சாய்ந்தமருதை பிறப்பிடமாக கொண்ட நபார் இளம் வயதில் கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக பிரகாசித்துவிளங்கினார்.
பின்னர் விளையாட்டு உத்தியோகத்தராக 1977ம் ஆண்டு நியமனம் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவுபிரதேச செயலகத்தில் கடமையாற்றினார். இதனைத் தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசசெயலகங்களில் கடமையாற்றி விளையாட்டுத்துறை அபிவிருத்தி பெரிதும் பங்காட்டியுள்ளார்.
கால்பந்து விளையாட்டில் உயர் டிப்ளோமாவை இந்தியாவில் பயின்றுள்ள இவர் 1998ம் ஆண்டு அம்பாறை மாவட்டவிளையாட்டு அதிகாரியாக பதவி உயர்வு பெற்று மேலும் மாவட்டத்தின் விளையாட்டுத்துறை அபிவிருத்திற்குபங்களிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனது ஓய்வின் பின்னரும் கல்முனை பிராந்தியத்தின் விளையாட்டுத்துறை அபிவிருத்திற்கு பெரிதும் பங்காற்றிவருகின்றார்.
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் தனது ஆலோசகராக இவரை நியமனம் செய்ததன் மூலம் இவரின்விளையாட்டுத்துறை ஆர்வத்திற்கு கிடைத்த பெரும் கௌரவமாக விளையாட்டு வீரர்கள், உத்தியோகத்தர்கள்,விளையாட்டு ஆர்வலர்கள், புத்திஜீவிகள் பார்க்கின்ற அதே வேளை இந்நியமனம் குறித்து பிரதி அமைச்சருக்குதங்களது நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.