இக் காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தின் ஆட்சி அதிகாரத்தில் மாகாண அமைச்சராக இருந்த எம்.எஸ்.உதுமாலெப்பை எந்த விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இருந்து விட்டு தற்போது ஞானம் பிறந்தது போல் இம் முறை மத்திய மற்றும் மாகாண அரசியல் பலத்தைப் பயன்படுத்தி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்விக் கல்லூரி ஆசிரியர்களை முன்கூட்டியே கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு நியமிக்க கிடைத்த சந்தர்ப்பத்தினை கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சியினர் இழந்து விட்டதாக இவர் கூறுவது நகைப்புக்குரிய விடயமும். சந்தர்ப்பவாத அரசியல் செயற்பாடாகும். என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவகார வேலைவாயப்புச் செயலாளருமான ஏ.எல்.தவம் தெரிவித்தார்.
இது விடயமாக அவர் கருத்து தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது வெளி மாகாணங்களிலுள்ள மாவட்டங்களுக்கு கிழக்கு மாகாண ஆசிரியர்களை நியமித்த போது பேசாமல் இருந்து கொண்டார்.இதன் காரணமாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டனர். இவரது காலத்தில் வெளிமாவட்டங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை தற்போது எமது மாகாண ஆட்சி அதிகாரத்தை வைத்து நமது மாவட்டங்களுக்கு நாங்கள் கொண்டு வருகின்றோம்.இவர் அக்காலத்தில் விட்ட தவறினை நாங்கள் தற்போது நிவர்த்தி செய்து வருகின்றோம்.
சென்ற வருடம் கல்வியற் கல்லுாரி ஆசிரியர்கள் கிழக்கு மாகாணத்திற்கு வெளியே நியமிக்கப்பட்டனர். இவ்விடயத்தை நமது முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு அதில் வெற்றி கண்டு கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இவர்கள் நியமிக்கப்பட்டனர். இது கிழக்கு மாகாண எதிர்கட்சித் தலைவருக்கு தெரியவில்லையா? இவரது செயற்பாடு எப்படி என்றால் தற்போது நியமனம் பெற்ற கல்வியற் கல்லுாரி ஆசிரியர்களை கொண்டு வருவதில் நானும் ரௌடியாக உள்ளேன் என்பதை இவர் வெளிக்காட்டுவது சிரிப்புப் பொலிஸ் மாதிரியாக தென்படுகின்றது.
சென்ற கிழமை வெளி மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட கல்வியற் கல்லுாரி ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்திற்கு கொண்டுவருவதில் நான் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட கிழக்கு மாகாண அமைச்சர்கள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்து முதலமைச்சர் மத்திய கல்வியமைச்சர் பிரதமர் ஆகியோர்களை சந்தித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இது விடயத்தில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் நமது ஆசிரியர்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு நியமனம் பெறுவதற்கான வாயப்பு அதிகம் உள்ளது என மகாண சபை உறுப்பினல் ஏ.எல். தவம் மேலும் தெரிவித்தார்.
ஊடகப்பிரிவு