அப்துல்சலாம் யாசீம்-
கிழக்கு மாகாண மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களுக்காக பாடசாலை ரீதியாக இலங்கை ஆசிரியர் சேவை, தரம் 3-ஐ (அ) க்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக 22.10.2016 அன்று நடைபெற்ற போட்டி பரீட்சையில் விண்ணப்பம் கோரியதற்கிணங்க இல்லாதபடி குளறுபடி.
கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் கிழக்கு மாகாண மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களுக்காக பாடசாலை ரீதியாக இலங்கை ஆசிரியர் சேவை, தரம் 3-ஐ (அ) க்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை கடந்த (24.08.2016) திகதி விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.
அவ் விண்ணப்பத்தில் பொது அறிவு வினாத்தாளில் 'ஆசிரியர் துறைக்கு இயைபுடைய அந்த துறை தொடர்பான பொது அறிவு அத்துடன் மற்றும் தேசிய ரீதியல் இடம்பெற்ற மற்றும் இடம் பெறுகின்ற கல்வியின் போக்கு சம்பந்தமான பொது அறிவு மற்றும் கல்வியினை நவீனமயமாக்கல் சம்பந்தமான பொது அறிவினைப் பரீட்சிப்பதற்காக பல்தேர்வு' எனக் குறிப்பிடப்பட்டு விண்ணப்பத்தில் கோரப்பட்டிருந்தது.
ஆனால் 22.10.2016 அன்று நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் வினாத்தாளானது கல்விக்கு சம்பந்தமின்றி சர்வதேசம், தேசிய ரீதியாக இடம்பெற்ற சம கால பொது அறிவை மாத்திரம் மையப்படுத்தி பரீட்சை இடம் பெற்றுள்ளது. பகிரங்கமான அறிவித்தலுக்கு மாற்றமாக இருக்கின்ற படியாலும், பரீட்சைக்கும், விண்ணப்பத்திற்கும் முரண்பாடுகள் இருக்கின்ற படியால் தோற்றிய பரீட்சாத்திகள் அதிருப்தி அடைந்துள்ளார்கள் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹீர் இன்று (27) 65வது மாகாண சபை அமர்வில் அவசர பிரேரணையொன்றினை முன்வைத்து உரையாற்றினார்.
எனவே குறித்த பரீட்சையினை ரத்துச் செய்து மீளவும் உரிய பிரமாணப்படி கோரப்பட்டு அதற்கேற்ப பரீட்சையினை நடத்துவதற்கு இவ் உயரிய சபை கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு உத்தரவினை இடுமாறும் கோரிக்கை விடுத்தார்.