நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் கீழ்த்தரமான செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்படுமாயின் எதிர்காலம் அச்சுறுத்தல் மிக்கதாக மாறும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
தான் எங்கு செல்வதென்பதை கண்டறிய பாதுகாப்பு அதிகாரிகள் ஒத்துப் பார்க்க ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இவ்வாறு வரவேண்டியதில்லை. என்னுடைய நிகழ்ச்சி நிரலை கேட்டால் நான் வழங்குவேன். இதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் நேரம் செலவிட வேண்டியதில்ல.
கடந்த காலத்தில் புலனாய்வுத் துறை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவுள்ளவர்களைப் பற்றியே தகவல் திரட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 10 வருட காலம் பாதுகாப்புத் துறையில் இருந்த என்னை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதுவதாயின் அது கவலைக்குரிய ஒன்றாகும் எனவும் வெலிகாமத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.