ஆசிரியர்களுக்கு முன் மோசமாக பேசிய தவம்..!

அப்துல்சலாம் யாசீம்-

கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்திற்குள் வௌி மாவட்டங்களில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்கள் வருகை தந்து முதலமைச்சருடன் ஆசிரியைகள் பேசிக்கொண்டிருந்த வேளையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம்  ஆசிரியைகளுக்கு முன்னால் இன்று (27) கீழ் தரமான வார்த்தைகளை பேசியமையினால் (சீயம்ட ஒபீஸ் வேசைர வெத்திலைப்பட்டி மாதிரி)  ஆசிரியர்கள் அவமானப்பட்ட நிலையில் வௌியில் வந்த விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.

கிழக்கு மாகாண சபையின் 65 வது அமர்வு நடைபெற்றதையடுத்து முதலமைச்சரின் அலுவலகத்திற்குள் தங்களுக்கு அருகிலுள்ள கல்வி வலயங்களுக்கு நியமனங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்துக்கொண்டிருக்கும் போது கதவை திறந்து முதலமைச்சர் அலுவலகத்திற்குள் நுழைந்த ஆர்.அன்வருக்கே அவர் இவ்வார்த்தையை பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும் இடமாற்றம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் .ஆசிரியர்கள் இருந்த நேரத்தில் கீழ்தரமான வசனங்களை பயன்படுத்தியமை தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வாய்மூடி இருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

இருந்தும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் முதலமைச்சருக்கு முன்னால் தெரிவித்த கீர்தரமான வார்த்தைக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டுமெனவும் கலந்துறையாடலில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.இவ்வாறான செயற்பாடுகளும் வார்த்தைப்பிரயோகங்களும் நடக்காமல் இருக்க கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் இவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கலந்துறையாடலில் கலந்து கொண்டோர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -