காலி ஹராபிட்டிய வைத்தியசாலையில் சிறுவர் புற்றுநோய் சிகிச்சை பிரிவு ஒன்றை அமைப்பதற்கான நிதி சேகரிக்கும் நடைபவனி நேற்று (வியாழக்கிழமை) காலை யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் ஆரம்பமாகியது. இந்த நடைபவனியை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
நடைபவனிக்கான ஆரம்ப வைபவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வட மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் உட்பட பிரபல கிரிகெட் வீரர்களான குமார் சங்ககார, மகேல ஜேயவர்த்தன ஆகியோர் கலந்து கொண்டிருந்தன. குறித்த நடைபவனி மூலம் சுமார் ஐந்து மில்லியன் ரூபா நிதியினை திரட்ட திட்டமிட்டுள்ளதாக ட்ரெயில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
எதிர் பாராத விதமாக யாழ் வீதிகளில் வந்த வேளை ஒரு வீட்டிலிருந்த யுவதி ஓடி வந்து முன்னாள் இலங்கை கிறிக்கட் அணியின் தலைவர் ஜெயவர்த்தனாவை கட்டிப் பிடித்து முத்தமிட்டது அனைவரையும் பரபரப்படைய வைத்துள்ளது.