நியுஸிலாந்து அணிக்கெதிரான 5 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் 190 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் சுவாரஷ்யமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
டோனி மற்றும் கோஹ்லி தங்களது அணி ஜேர்சியில் பெயர்களை மாற்றியவாறு போட்டியில் பங்குகொண்டனர். இந்த போட்டியில் டோனியின் ஜேர்சியில் “தேவகி” எனவும்,கோஹ்லியின் ஜேர்சியில் “சரோஜ்” எனவும் பெயரிடப்பட்டிருந்தது.
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது:-
இவர்கள் தங்களது தாயாரின் பெயர்களை ஜேர்சியில் அச்சிட்டவாறு நேற்றய தினம் போட்டியில் கலந்துக்கொண்டுள்ளதா தெரிவிக்கப்படுகின்றது.