மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் நேரடியான பொறுப்பேற்க வேண்டும் என்றும் அதன்படி அவர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோப் குழு அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த கோப் குழுவின் அறிக்கை சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இதனை தாக்கல் செய்தார்.
அத்துடன் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை கோப் குழுவின் உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேவேளை அந்த அறிக்கையை தயாரிக்கும் போது அடிப்படை குறிப்புகள் இன்றி 09 பேரும், அடிப்படை குறிப்புகளுடன் 18 பேரும் அந்த அறிக்கையை நிராகரித்துள்ளனர்.