க.கிஷாந்தன்-
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரப்பத்தனை வைத்தியசாலையில், இரவு நேர கடமையில் இருந்த ஊழியரை தாக்கியதுடன் வைத்தியசாலைகளின் நடவடிக்கைகளைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அதே பிரதேசத்தைச் இருவரை, அக்கரப்பத்தனை பொலிஸார் சனிக்கிழமை 08.10.2016 அன்று காலை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஹோல்புறுக் நகரத்தை அண்மித்துள்ள தோட்டமொன்றில் ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை பார்வையிடுவதற்காக மேற்படி இளைஞர்கள் இருவரும் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். இளைஞர்கள் மதுபானம் அருந்தியிருந்தமையால், வைத்தியசாலையில் கடமையிலிருந்த உழியர், இவ்விருவரையும் வைத்தியசாலைக்குள் அனுமதிக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த இருவரும், ஊழியரை தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளதுடன் கடுமையாக தாக்கியுமுள்ளனர். இந்நிலையில், தாக்குதலுக்குள்ளான ஊழியர், உடனடியாக அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு அலைபேசியின் மூலம் விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அறிந்துகொண்ட இருவரும், பொலிஸார் வருவதற்கு முன்பாக, முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், பொலிஸார் சனிக்கிழமை காலை இருவரையும் கைதுசெய்துள்ளடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.