சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட மல்வத்தை கணபதிபுரம் விக்னேஸ்வரா வித்தியாலய புலமையாளர் பாராட்டுவிழா நேற்று 27ஆம் திகதி வியாழக்கிழமை அதிபர் சி.கிருபைராஜா தலைமையில் நடைபெற்றது.
2015இல் சித்திபெற்ற எஸ்.யுஜிதா 2016இல் சித்திபெற்ற தெ.அர்ச்சனா ர.ருபிதன் ச.நிசோபிதன் ஆகியோரும் கற்பித்த ஆசிரியர் இ.ஜெயசிங்கம் ஸ்தாபக அதிபர் சி.கிருபைராஜாவும் பாராட்டப்பட்டனர்.
பிரதமஅதிதியாக சம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் கலந்துசிறப்பித்தார்.
கௌரவ அதிதிகளாக உதவுநிறுவனங்களின் இணைப்பாளர்களான கி.ஜெயசிறில் கே.வீரவாகு சிறப்பு அதிதிகளாக கல்வித்திணைக்கள உயரதிகாரிகள் விசேடஅதிதிகளாக அண்மித்த பாடசாலை அதிபர்களும் சிவில்சமுகபிரதிநிதிகளும் கலந்துகொண்டனர் என ஆசிரியர் ப.நாகராஜா தெரிவித்தார்.