ஞானசாரரை கைது செய்யக்கோரி ரிஷாட் சண்டையிட்டார் : அதை தடுத்த சம்பிக்க நல்லாட்சி அமைச்சர் - மஹிந்த

லுத்கம பேருவளை கலவரம் இடம்பெற்ற போது ஞானசார தேரரை கைது செய்யக்கோரி ரிஷாட் பதியுதீன் அமைச்சரவையில் என்னோடு சண்டையிட்ட போது அவ்வாறு கைது செய்தால் அரசைவிட்டு வெளியேறுவேன் எனக்கூறியவர்கள் தற்போது நல்லாட்சி எனக்கூறிக்கொள்ளும் அரசில் பிரபல அமைச்சர்களாக உள்ளனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

அவரது காரியாலத்தில் முஸ்லீம்களை நேற்று சந்தித்த பின்னர் முக்கியஸ்தர்கள் சிலருடன் கலந்துரையாடலில் இதனை அவர் குறிப்பிட்டார்.

ஞானசார தேரரை பேருவளை கலவரம் இடம்பெற்ற அப்போது நீங்கள் கைதுசெய்திருக்கவேண்டும் என அங்கு கருத்து வெளியிடப்பட்டமைக்கு பதில் அளித்து அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர்..

அலுத்கம பேருவளை கலவரம் இடம்பெற்ற போது ஞானசார தேரரை கைது செய்யக்கோரி ரிஷாட் பதியுதீன் அமைச்சரவையில் என்னோடு சண்டையிட்டார் அதை அப்போது எங்கள் அமைச்சரவையில் இருந்த ரவுப் ஹக்கீம் பைஸர் உள்ளிட்ட பலர் அறிவார்கள் அப்பொது அவரை கைது செய்தால் அரசைவிட்டு வெளியேறுவேன் என பாட்டலி சம்பிக்க என்னோடு சண்டையிட்டார். அவருடைய கட்சியும் வெளியேறுவதாக குறிப்பிட்டார்.

அப்பொது பொது பலசேனா அமைப்புக்கு கூட்டம் வைக்க ஹெல உறுமயவே அனுமதி பெற்றுக்கொடுத்தது. இப்பொது நாம் இவற்றின் பின்னால் இருந்தாக கூறுவதால் அவை உண்மையாகாது அவைகளை முடியுமானால் நிரூபிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -