ஹாசிப் யாஸீன், அகமட் எஸ்.முகைடீன், எம்.எம்.ஜபீர்-
தேசிய விளையாட்டு விழாவை யாழ்ப்பானத்தில் நடத்தியதன் மூலம் வடக்கில்விளையாட்டுத்துறைக்கு புத்துயிர் அழித்தார். அதேபோன்று இன்று கிழக்கின் முக வெற்றிலைகல்முனை நகரத்தில் விளையாட்டு மைதானத்தை உருவாக்கின்ற பணியினை ஆரம்பித்துஇப்பிராந்தியத்தின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு அடித்தளமிட்டுள்ளார். நாங்கள் பலஅபிவிருத்திகளை இந்த மண்ணில் அங்குரார்ப்பணம் செய்ய இருக்கின்றோம். இதன் மூலம்அபிவிருத்தியில் ஒரு மைல்கல்லை அடைந்தே தீர்வோம் என விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணிஎச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதான அபிவிருத்தி அங்குரார்ப்பண விழா நேற்று(09) ஞாயிற்றுக்கிழமை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர பிரதம அதிதியாக கலந்துகொண்டு இம்மைதான அபிவிருத்திக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்ஏ.எல்.எம்.நசீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், விளையாட்டுத்துறைஅமைச்சின் செயலாளர் டீ.எம்.ஆர்.பி.திசாநாயக்க, பணிப்பாளர் நாயகம்எஸ்.ஈ.ஆர்.எம்.எஸ்.பீ.பண்டார, பிரதேச செயலாளர்களான எம்.எச்.கனி, ஏ.எல்.எம்.சலீம்,சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா, கல்முனை முகைதீன்ஜூம்ஆப் பள்ளிவாசல் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ், முன்னாள் தவிசாளர்கள் எம்.ஏ. அன்சில்,எம்.எம்.தாஹிர் உள்ளிட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள், விளையாட்டுக் கழகங்களின்பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் ஹரீஸ்மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,
விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் வகையில் பொத்துவில் தொடக்கம் பெரியநீலாவனை வரையுள்ள கரையோரப் பிரதேசத்தில் ஒரு முழுமையான விளையாட்டுமைதானம் இல்லாமை விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள், சமூக நலன் விரும்பிகளின்நீண்டநாள் பெரும் குறையாக காணப்பட்டது. இப்பிராந்தியத்தின் மக்கள் பிரதிநிதியாகிய நான்விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் என்ற வகையில் இக்குறையை நிவர்த்திப்பதற்காகசகல சமூகங்களும் வாழ்கின்ற கல்முனை நகரத்தில் காணப்படும் சந்தாங்கேணிவிளையாட்டு மைதானத்தை சகல வசதிகளும் கொண்ட ஒரு மைதானமாக அமைப்பதற்கானமுயற்சிகளை மேற்கொண்டேன்.
விளையாட்டுத்துறை அமைச்சினால் மாவட்டத்திற்கு ஒரு மைதானத்தை தான்முழுமையான மைதானமாக அமைக்க முடியும். அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில்முழுமையான மைதானத்தை அமைப்பதற்கான கோட்டா முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ காலத்தில் அம்பாறை நகரில் அமைப்பதற்காக வழங்கப்பட்ட நிலையில்கல்முனையில் சகல வசதிகளும் கொண்ட மைதானத்தை அமைப்பதில் சிக்கல்கள்காணப்பட்டன.
இருந்த போதிலும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தலைமையில்அமைச்சு அதிகாரிகள் உள்ளிட்ட நாம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்காவுடன்பேச்சுவாத்தை நடத்தி கரையோரப் பிரதேசத்தின் கேந்திர மையமாக காணப்படும்கல்முனையில் முழுமையான மைதானத்தை அமைப்பதற்கான தீர்மானத்தை எடுத்து அதற்குதேவையான நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளோம்.
இதன் மூலம் ஓடுபாதை, 17 விதமான விளையாட்டுக்களை விளையாடக் கூடிய உள்ளகவிளையாட்டு அரங்கு, நவீன தரத்திலான பார்வையாளர் அரங்கு, நீச்சல் தடாகம் போன்றஎல்லா வசதிகளும் கொண்ட ஒரு முழுமையான மைதானத்தை அமைப்பதற்கானவரைபடங்கள் தயாரிக்பட்டுள்ளது. அந்த வகையில் அவ்வேலைத்திட்டத்தை இன்றுஆரம்பித்து வைத்துள்ளோம். இது உண்மையில் இப்பிராந்தியத்தில் வாழ்கின்ற விளையாட்டுகழகங்கள் மற்றும் இளைஞர் சமூதாயத்திற்கு கிடைத்த பெரும் பாக்கியமாக காணப்படுகிறது.
முற்போக்கான சிந்தனை கொண்ட சிறுபான்மை தமிழ் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளைமதித்து நடக்குகின்ற எனது பல்கலைக்கழக நண்பரான விளையாட்டுத்துறை அமைச்சர்;தயாசிறி ஜயசேகர அண்மையில் தேசிய விளையாட்டு விழாவை யாழ்ப்பானத்தில்நடத்தியதன் மூலம் வடக்கில் விளையாட்டுத்துறைக்கு புத்துயிர் அழித்தார். அதேபோன்றுஇன்று கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை நகரத்தில் விளையாட்டுமைதானத்தை உருவாக்கின்ற பணியினை ஆரம்பித்து இப்பிரதேசத்தின் விளையாட்டுத்துறைவளர்ச்சிக்கு அடித்தளமிட்டுள்ளார். இவ்விளையாட்டு மைதானம் சிறப்பாக அமைகின்றபோதுநிச்சயமாக இப்பிராந்தியத்திலுள்;ள வீரர்களின் திறமைகள் தேசிய மற்றும்; சர்வதேசசாதனைகளை படைப்பதற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.
கல்முனை பிரதேசத்தின் அபிவிருத்தியில் வசந்த காலம் இன்று ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் வழிகாட்டுதலில்ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல்அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் தலைமையில் நாங்கள் பல அபிவிருத்திகளை இந்தமண்ணில் அங்குரார்ப்பணம் செய்ய இருக்கின்றோம். இதன் மூலம் அபிவிருத்தியில் ஒருமைல்கல்லை அடைந்தே தீர்வோம் என்பதை மிக ஆணித்தரமாக கூறிக்கொள்ளவிரும்புகின்றேன் எனவும் தெரிவித்தார்.