தலைவரே தலைநிமிர்ந்து நில்லுங்கள்...

லைவரே
தளரவும் வேண்டாம்
தடைகள் கண்டு
தயங்கவும் வேண்டாம்...!!!

தொடரட்டும்
உங்கள் பணி
தொடரணியாய்
தொடர்ந்து வருவோம்
நாங்கள்...!!!

நட்டவர்
இல்லாது போனாலும்
கெட்டவர்
இதன் நிழலில்
அமரக்கூடாது...!!!

குருவிச்சைகளை
அகற்றிவிட்டு
விழுதுகளுக்கு
இடம் கொடுங்கள்...!!!

காய்த்த மரம்
கல்லடி படுவது
வழமைதான்
வௌவால்கள்
வரும்,போகும்
இதற்காக
மரம் அழுவதில்லையே...?

வண்டிலுக்கு
கீழால் போற அதுபோல
இன்னும் சிலபேர்
நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்...!!!

இவர்களைப் பார்த்து
மற்றவர்கள்
பாடம் கற்றுக் கொள்ளட்டும்...!!!

யானைக் கோட்டைக்குள்
விருட்சத்துக்கு
வித்து நட்டோம்
விருட்சம்
விரிந்து கொண்டதனால்
பலபேர்
வந்தமர்ந்து கொண்டனர்...!!!

சவால்களை
சந்தித்து
சாதித்தவர்கள்
ஓரமாய்
ஒதுங்கிக் கொள்ள நேர்ந்தது...!!!

சுயநலத் தீயில்
குளிர்காய வந்தவர்கள்
பொது நலத் தொண்டர்களை
துரத்தியடித்ததுதான் வரலாறு...!!!

தலைமை மகுடத்திற்கு
தகுதியில்லாதவர்கள்
தனக்கு தானே முடி சூடிக்கொண்டு
தலைகுனிந்துகிடக்கிறார்கள்...!!!

-மீராவோடை சுபைர்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -