ஜனாதிபதியின் வருகையால் முஸ்லிம்களின் ஜும் ஆக் கடமை பாதிக்கப்படக்கூடாது..!

அப்துல்சலாம் யாசீம்-
திர்வரும் வெள்ளிகிழமை முஸ்லிம் உத்தியோகத்தர்கள் ஜும் ஆவுக்கு செல்வதை முஸ்லிம் அரசியல் வாதிகள் உறுதிப் படுத்தி கொள்ள வேண்டுமென கிண்ணியா நகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.ஏ.எம்.நிஜாம் தெரிவித்தார். 

அன்றைய தினம் காலை 10.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான கூட்டம் திருகோணமலை நகரில் நடை பெற உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதில் அதிகமான முஸ்லிம்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 12.00 மணிக்கு முஸ்லிம்கள் ஜும் ஆவுக்கு செல்ல வேண்டும்.

இந்நிலையில் கூட்டம் எத்தனை மணிக்கு ஆரம்பமாகும். எத்தனை மணிக்கு முடியும் என்ற குழப்பம் முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு இருக்கிறது. இது தெளிவு படுத்தப் பட வேண்டும். 

எனவே ஜும்ஆ விடயத்தை அதிகாரத்தில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் ஜனாதிபதிக்கு முன் கூட்டியே எடுத்துக் கூறி முஸ்லிம்கள் ஜும்ஆவுக்கு செல்வதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் என மேலும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -