நாடு முழுவதும் உள்ள அனைத்து சாரதி பயிற்சி நிலையங்களும் அடுத்த இரண்டுவாரத்திற்கு இடையில் சோதனைக்கு உட்படுத்தப்படும் என மோட்டார் போக்குவரத்துதிணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த சோதனை நடவடிக்கைகள் பயிற்றுனர்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பில்மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சாரதி பயிற்சி நிலையத்திற்கு பயிற்சிக்காக வருகை தருபவர்களின் கட்டணத்தைமட்டுப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மட்டுப்படுத்தல் நடவடிக்கை 2017ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதிஅமுல்படுத்தப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் உதவிஆணையாளர் ஜே.ஏ.எஸ்.ஜயவீர தெரிவித்துள்ளார்.