யாழ்ப்பாணத்தில் சிறுவர்களுக்கான வாகனம் வடிவமைப்பு..!

பாறுக் ஷிஹான்-
யாழ் மாவட்டம் நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் ஒருவரால் சிறுவர்களுக்கான மாதிரி மகிழூந்து வாகனம் ஒன்று கடந்த மாதம் அளவில்வடிவமைக்கப்பட்டுள்ளமை யாவரும் அறிந்ததே.

குழந்தைகளுக்கு எப்போதுமே பிடித்தது விளையாட்டுப்பொருட்கள் அதிலும் மகிழூந்து என்றால் சிறுவர்களுக்கு கொள்ளைப்பிரியம். 

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின்முன் வீதியில் வசிக்கின்ற கலாநிதி. மகேஸ்வரக்குருக்கள் சரவணபவ ஐயர் மற்றும் அவருடைய தோழர் ஆகியோரால் இந்த மகிழூந்து வடிவமைக்கப்படுள்ளது. கலாநிதி. சரவணபவ ஐயர் அவர்கள் யாழ் பல்கலைக்கழக ஆங்கில மொழி கற்கைகள் அலகின் சிரேஸ்ட விரிவுரையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தன்னுடைய ஓய்வு நேரத்தில் ஒரு பொழுதுபோக்காகவே இதனை தன்னுடைய நண்பருடன் இணைந்து உருவாக்கியுள்ளார்.

கலாநிதி. சரவணபவ ஐயர் அவர்கள் குழந்தைகள்/சிறுவர்கள் மீது மிகுந்த அக்கறையும் பாசமும் உடையவர். அத்துடன் அவருடைய பாரியாரும் யாழ் பல்கலைக்கழக விளையாட்டு அலகின் போதனாசிரியராக பணியாற்றுகிறார். இவர்களுடைய திட்டமிடலில் சிறார்களின் விளையாட்டினை மேலும் ஊக்குவித்து சிறுவர்களை மேலும் செயற்றிறன் மிக்கவர்களாக மாற்றவேண்டும் என்கின்ற நோக்கத்தில் இவ்வாறான ஒரு பொழுதுபோக்கான கண்டுபிடிப்பை மேற்கொண்டிருக்கின்றனர்.

தனியா ஓடுமா...??? தள்ள வேண்டுமா...???

பலரின் வினாவாக அமைந்தது இதுவே. இந்த மகிழூந்து மிகவும் தேர்ச்சியாக, மின்கலம் மூலம் சக்தியை வழங்கி மின் மோட்டரை இயங்கச் செய்வதின் மூலம் சக்கரங்களை இயங்கச் செய்ய வைக்கின்றது. 

மகிழூந்தினை முன்னால் மற்றும் பின்னால் நகர்த்துவதற்கு சுக்கான் மற்றும் கியர் (Gear) என்பன மிகவும் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளன. 

அத்துடன் இவ் வடிவமைப்பிற்க்கு பாவிக்கப்பட்ட பொருட்கள் ஏற்கனவே பாவிக்கப்பட்ட மற்றும் கழித்து விடப்பட்ட பொருட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.அத்துடன் மகிழூந்து ஓட்டுனருடன் இன்னும் ஒருவரும் அருகே இருந்து பயணிக்கமுடியம். இதனை ஆக்குவதற்கு ஏறத்தாள முப்பதாயிரம் ரூபா வரை முடிவடைந்தது என்று கலாநிதி. சரவணபவ ஐயர் அவர்களை வினவிய போது குறிப்பிட்டிருந்தார்.

இந்த மகிழூந்தினால் சுமாரான ஒரு வேகத்தில் சிறுவர்களின் கட்டுப்பாட்டுடன் அவர்களை மகிழ்விக்கும் தூரத்துக்கு கடக்கும் வகையில் பிரயாணிக்கவல்லது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட மாதிரி மகிழூந்தின் வெள்ளோட்டமானது கடந்த 18 செப்டம்பர் 2016 அன்று கலாநிதி. சரவணபவ ஐயர் அவர்கள் வீட்டிலேயே இடம் பெற்றது.

அதனை ஓய்வு பெற்ற உடற்கல்வி துறை விற்பனர் திரு. குமாரசாமி அவர்கள் உத்யோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இவ்வாறான கண்டுபிடிப்புகள் நிச்சயமாக எமது சமூகத்தினை உயர்த்துவதுடன் அடுத்த சந்ததிக்கு நிச்சயமாக ஒரு வலுவூட்டலை கொடுக்கும் என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை. மேலும் இவ்வாறான நுட்ப வடிவமைப்புகள் வரவேற்கத்தக்கதோடுஎமது சமூகத்தால்நிச்சயமாக பாராட்டுப்பெறும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -