ஹட்டனில் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகியன கவனயீர்ப்பு போராட்டம்..!

க.கிஷாந்தன்-
1992ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கூட்டு உடன்படிக்கை ஊடாக கடந்த 27 வருடங்களுக்கு மேலாக தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் நிர்ணையக்கப்பட்டு வந்த போதிலும் இன்று 450 ரூபாய் அடிப்படை சம்பளம் என்ற மட்டத்தில் காணப்படுகின்றது.

இந்த நிலையில் தொழிலாளர்களுக்கு நிலுவை பணம் அல்லாது 730 ரூபாயுடன் சம்பள உடன்படிக்கையை கைச்சாத்திட போகும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்காக கோரிக்கையாக முன்வைக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் சம்பளத்தை உயர்த்தி தர வேண்டும்.

இன்று மலையகம் தழுவிய ரீதியில் இன்று தொழிலாளர்கள் ஆயிரம் ரூபாய்க்கு போராட்டம் நடத்துகின்றனர். இதற்கு வலு சேர்க்கும் முகமாக அட்டன் மல்லியப்பு சந்தியில் தொழிலாளர் தேசிய சங்க முக்கிய உறுப்பினர்கள் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் முக்கிய உறுப்பினர்கள் என அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

04.10.2016 அன்று மாலை அட்டன் மல்லியப்பு சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கூறியதாவது,

கூட்டு ஒப்பந்த அடிப்படையில் ஆயிரம் ரூபாவை பெற்றுத் தருவதாக கூறிவிட்டு 2015ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதி கைச்சாத்திடப்பட வேண்டிய சம்பள உயர்வு ஒப்பந்தத்தை காலம் கடத்தி கடந்த 18 மாதங்களுக்கு மேலாக இழுத்தடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தொழிலாளர்களுக்கான நிலுவை சம்பளமும் கிடைக்கப் பெறாமல் இருப்பதில் பல்வேறு காரணங்களை எடுத்துரைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆயிரம் ரூபாவை பெற்றுத் தர வேண்டும் என தொழிலாளர்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர். இவர்கள் வீதியில் இறங்கி செய்யும் போராட்டங்களுக்கு வலு சேர்க்க நாமும் மல்லியப்பு சந்தியில் அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்துகின்றோம். அத்தோடு எதிர்வரும் 6ம் திகதி தலவாக்கலை நகரில் மாபெரும் எழுச்சி போராட்டம் ஒன்றை மக்கள் சக்தியால் நடத்த போகின்றோம்.

ஆனால் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபாவை கேட்கவில்லை. கோரிக்கையை முன்வைத்த தொழிற்சங்கம் ஒன்று இந்த ஆயிரம் ரூபாவை பெற்றுத்தரவே வேண்டும் என்றபதற்காகவே அழுத்தம் கொடுத்து இந்த போராட்டத்தினை முன்னெடுக்கின்றோம்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்க மக்கள் சக்தி பெருகும் என நாம் எதிர்பார்க்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -