சுகாதார அமைச்சர் ராஜிதசேனாரத்ன தலைமையிலான குழு பாலஸ்தீன் பயணம்..!

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
லங்கை பாராளுமன்றத்தின் குழு சார்பாக சுகாதார அமைச்சர் ராஜிதசேனரத்ன தலைமையிலான பராளுமன்ற குழுவினர் நாளை 10.10.2016 தொடகம் இம்மாதம் 15ம் திகதி வரை பாலஸ்தீனத்திற்கன விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக பாலஸ்தீனத்திற்கான இலங்கை தூதுவர் பெளசான் அனவர் இன்று என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்தார். 

மேலும் குறித்த விடயம் சம்பந்தமாக தனது கருத்தினை தெரிவித்த பெளசான் அன்வர். சுகாதார அமைச்சருடன் சேர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களான செயித் அச்லிஷாஹிர் மெளலான, மற்றும் பிமல் ரட்நாயக்க, காதர் மஸ்தான், சிவ மோகன் ஆகியோர்களும் வருகை தரவுள்ளதாக தெரிவித்தார். இலங்கைக்கும் பாலஸ்தீனத்திற்கும் இருந்து வருக்கின்ற நட்புறவினை மேலும் அதிகரிக்கும் முகமாகவும் பாலஸ்தீன மக்களின் எதிர்கால நிம்மதிக்காக சர்வதேசத்தின் பார்வையினை பாலஸ்தீனத்தின் மீது திருப்பும் முகமாக இவ்விஜயம் அமையப்போகின்றது எனவும் பெளசன் அன்வர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -