தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிக்கையிட்டுள்ளது.
ஆளுநர் மாளிகை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிய ஆளுநர் வித்யாசாகர் ராவ் 22.10.2016 காலை 11.30 மணிக்கு சென்றார்.
அவரை தமிழக மூத்த அமைச்சர்கள், அரசாங்க உயர் அதிகாரிகளும் வரவேற்றனர். மருத்துவமனையின் மூத்த மருத்துவர் பிரதாப் ரெட்டி, முதல்வரின் உடல்நிலை குறித்து விளக்கினார். பின்னர் முதல்வர் அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டுக்கு சென்று மருத்துவக் குழுவினரை சந்தித்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் சிகிக்சை குறித்து கேட்டறிந்தார். முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை திருப்தி அளிப்பதாகவும். சிகிச்சையை தொடருமாறும் தெரிவித்துவிட்டு அப்பல்லோவில் இருந்து கிளம்பினார் ஆளுநர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.