புல்மோட்டை பிரதேச பிரதேச பாடசாலைகளின் கல்வி தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வர் தலைமையில் புல்மோட்டை மத்திய கல்லூரியில் 29.10.2016(சனி) பி.ப.4.30 மணியளவில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது
குறித்த கலந்துரையாடலில் குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.ஐ.பதுறுதீன்,புல்மோட்டை ஸலாமியா,சதாம்,அஸ் ஸபா,ஜின்னாபுரம், கனிஜவேலி சிங்கள மற்றும் மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளின் அதிபர்கள் உட்பட 4 வட்டார கிராம சேவகர்கள்,ஜம்மியத்துல் உலமா சபையின் செயலர் மௌலவி ஸாலிஹீன்,உள்ளூர் அரசியல் பிரமுகர்கள்,புல்மோட்டை பெரிய பள்ளிவாசலின்லெ,பாரியா ஜும்மா பள்ளிவாசல், கபீர்,ஹைரியா பள்ளிவாசல் ஆகியவற்றின் தலைவர் ,மற்றும் பாடசாலைகளின் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள்,உலமாக்கள் பலரும் கலந்து கொண்டு பிரதேச கல்வியினை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் ஆசிரியர் பற்றாக்குறை பாடசாலைகளுக்கான தேவைகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது
கலந்துரையாடலின் போது ஒவ்வொரு மாதமும் குறித்த உறுப்பினர்களோடு சேர்ந்து இன்னும் பல புத்தி ஜீவிகள் மற்றும் சங்கங்களின் தலைவர்கள் இணைத்து கல்வி சமபந்தமான கலந்துரையாடல் இடம்பெறவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது