ஹிஸ்புழ்ழாவின் ஹிரா பெளண்டேசன் அமைப்பினால் ஹிப்ழு பிரிவு ஆரம்பம்

ஜுனைட்.எம்.பஹ்த், எம் எச் எம் அன்வர்--


ஆரையம்பதி சிகரம் கிராமத்திலுள்ள ஜூம்ஆப்பள்ளிவாயலில் புனித அல்குர்ஆன் ஹிப்ழு வகுப்பு இன்று காழி நீதிபதியும் மூத்த உலமாவுமான மௌலவி எஸ் எம் எம் அலியார் ஹஸரத் மற்றும் புணர்வாழ்வு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லா ஆகியோரினால் இன்று (23)  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜூம்ஆப்பள்ளவாயல் தலைவர் எம் எச் எம் தாஹிர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் ஷைகுல் பலாஹ் அவர்களின் மகன் மௌலவி ஏ எம் றஹ்மதுல்லா பலாஹி அஷ்ஷெய்ஹ் ஏ எல் மும்தாஸ் மதனி முன்னாள் நகர முதல்வர் எஸ் எச் அஸ்பர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே எல் எம் பரீட் மௌலவி எம் எச் எம் புஹாரி பலாஹி மௌலவி ஏ ஜி எம் அமீன் பலாஹி நிருவாக உறுப்பினர்கள் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டனர்

ஹிப்ழு மாணவர்களுக்கான அல்குர்ஆன் பிரதிகள் மாணவர்களுக்கான சீருடை என்பன இந்நிகழ்வில் வழங்கப்பட்டதுடன் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள இக்கிராமத்தில் இவ்வாறான நிகழ்வுகள் மற்றும் பள்ளிவாயல் நிர்மாணிப்பிற்காக நிதியுதவி வழங்கிய ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்திற்கு நிருவாகத்தினால் நன்றி கூறப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -