விளையாட்டினூடாகவும் சமூகங்களுக்கிடையே ஒற்றுமையை நிலைநாட்ட முடியும் - தயாசிறி (விபரம்)













எம்.வை.அமீர்-
தேசியமட்ட விளையாட்டுக்களில் சகலசமூகங்களையும் சார்ந்த சிறந்த விளையாட்டு வீரர்களை இணைத்துக்கொள்வதனூடாக நாட்டில் தேசிய ஒற்றுமையையும் இனங்களுக்கிடையே புரிந்துணர்வையும் ஏற்படுத்த முடியுமென்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய மக்களின் நீண்ட நாள் கனவாகவிருந்த சந்தான்கேணி விளையாட்டு மைதானத்தை சுமார்272 மில்லியன் ரூபாய் செலவில் சர்வதேச தரத்துக்கு அபிவிருத்தி செய்யும் திட்டத்தின்கீழ் முதற்கட்டமாக 191மில்லியன் ரூபாய்களை செலவிட்டு நிர்மாணப்பணிகளை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிராத்தித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் 2016-10-09 ஆம் திகதி இடம்பெற்றது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் தயாசிறி ஜயசேகர சகல சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய சிறந்த விளையாட்டு வீரர்களை தேசிய அணிகளில் இணைத்துக்கொள்வது தொடர்பாக தான் யோசனை முன்வைத்துள்ளதாகவும் அதற்கான செயற்பாடுகளில் தான் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அமைச்சரின் முழுமையான உரையை இங்கு கேட்கலாம்: 


பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் உரையாற்றுகையில்: கல்முனையில் சிறந்த விளையாட்டு மைதானம் ஒன்றில்லாதகுறை பாரிய குறையாக இருந்து. இவ்வாறான சூழலில் தான் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டதன் காரணமாக இப்பிராந்தியத்தின் விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கான பாரிய முன்னெடுப்புகளை செய்துவருவதாகவும் அதன் ஒருகட்டமாக கல்முனை சந்தான்கேணி மைதானத்தை அபிவிருத்தி செய்வதற்கான பணிகளை இன்று ஆரம்பித்து வைத்துள்ளதாகவும் இதனூடாக இப்பிராந்திய விளையாட்டு வீரர்கள் பெரிதும் நன்மையடைவர் என்றும் தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் உரை முழுவதையும் இங்கு கேட்கலாம். 
நிகழ்வின்போது அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் பாராளமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன், கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் மாகாணசபை உறுப்பினர் ஆரீப் சம்சுடீன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிராத்தித் தலைவர் ஏ.எல்.அப்துல் மஜீத் உளிட்டவர்களும் விளையாட்டுத்துறை அமைச்சின் உயர் அதிகாரிகளும் திரளான மக்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின்போது வடக்கு மற்று கிழக்கு மாகாண உதைபந்தாட்ட அணிகளுக்கு இடையேயான சிநேகபூர்வ போட்டியும் பாடசாலை மாணவர்களின் கராத்தே நிகழ்வும் பாடசாலை மாணவிகளின் நடன நிகழ்வும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -