யாழ் நிலத்தடி நீரில் உள்ள பிரச்சனைகள் ஆராய்வு - அமைச்சர் ஹக்கீமின் பிரதிநிதி யாழ் வருகை

பாறுக் ஷிஹான்-
யாழ் மாவட்டத்தில்நிmலத்தடி நீரில் உள்ள பிரச்சனைகள் மற்றும் குடிநீர் நுகர்வோரின் பாவனைக்குறிய நீர் சம்பந்தமான குறைபாடுகள் தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (16) ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் தேசிய நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் விசேட பணிப்புரையின் கீழ்அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் நீர் வழங்கல் அமைச்சின் பிரதி தவிசாளருமான சபீக் ரஜாப்தீன் தலைமையில் யாழ் மாவட்டத்தில் நிலத்தடி நீரில் உள்ள பிரச்சனைகள் மற்றும் குடிநீர் நுகர்வோரின் பாவனைக்குறிய நீர் சம்பந்தமான குறைபாடுகள் ஆராயப்பட்டன.

இதன் போது யாழ்ப்பாணம் புதிய சோனகதெரு(பொம்மைவெளி) சுன்னாகம் நிலவரை கிணறு ஊர்காவல்துறை புங்குடுதீவு வேலனை 
அல்லைப்பிட்டி என பல பிரதேசங்களை நேரில் சென்று பார்வையிட்டதோடு மக்கள் கருத்துக்களும் இதன் போது அறியப்பட்டது.

இந்த சந்திப்பின் போது ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ரொசான் தமீம் திட்டப்பணிப்பாளர் பாரதிதாசன் பொருளியலார் ஜெகதீசன் தொழில்நுட்ப அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -