மருதமுனை சித்தி ஜஹிறா உயிரிழப்பு : உண்மை நிலை என்ன..? - ஆதாரத்துடன்..

பி.எம்.எம்.ஏ.காதர்-
சில தினங்களுக்கு முன் பெண் ஒருவர் இனந்தெரியாத நபர் ஒருவரால் ஆபத்தான நிலையில் களுவஞ்சிக்குடி வைத்தியாசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிகச் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண் தொடர்பில் பல் வேறு வதந்திகள் வெளிவந்துள்ள நிலையில் இச் சம்பவத்தின் உண்மை நிலையை ஆராயும் நோக்கோடு உயிரிழந்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதரன் ஆகியோரைச் சந்தித்து அவர்கள் சொன்ன விடையங்களை ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

மருதமுனை பிரன்ஞ்சிட்டி வீட்டுத்திட்டத்தில் வசித்து வந்த ஆதம்பாவா சித்தி ஜஹிறா (வயது 27) என்ற பெண்னே உயிரிழந்தவராவார் இவர் ஒரு பிள்ளையின் தாயான நிலையில் கணவனைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இப்பெண் சில மாதங்களாக கொழும்மில் உள்ள ஆடைத் தொழில்சாலையொன்றில் மேற்பார்வையாளராக தொழில் புரிந்து வந்துள்ளார் இந்த நிலையிலேயே கடந்த 2016-10-13ஆம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு ரயிலில் பயனித்துள்ளார்.

இவர் மட்டக்களப்பில் இருந்து தனக்கு அறிமுகமான நண்பர் மருந்து மற்றும் மாத்திரைகள் விற்பனை முகவரான சண்முகம்; மணிமோகன் என்பவருடன் காரில் பயணித்ததாகவும்; இருவரும்13ஆம் திகதி மாலை மருந்து மற்றும் மாத்திரைகள் விற்பனை முகவரான சண்முகம்; மணிமோகன் தங்கியிருக்கும் கல்லாறு வீட்டில் தங்கியிருந்தாகவும், அப்போதே இப்பெண் மயக்கமுற்றாதாகவும் இதன் போதே இப்பெண்ணை சண்முகம்; மணிமோகன் களுவஞ்சிக்குடி வைத்தியசாலையில் சேர்த்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் இப்பெண்ணின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததன் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் மூலமாக இப்பெண்ணை கொண்டு செல்லும் போது சண்முகம்; மணிமோகன் தனது காரை வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி விட்டு அம்பியூலன்ஸில் பயணித்ததாகவும், இந்த பயணத்தின் போது இடை வழியில் சோடா வாங்கி வருவதாக இறங்கியவர் தலைமறைவாகிப் போனதாகவும், பின்னர் அம்பியூலன்ஸில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பெண் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இவ்விடையம் தொடர்பில் உயிரிழந்த சித்தி ஜஹிறாவின் தந்தை ஆதம்பாவாவிடம் விசாரித்த போது அவர் தெரிவித்த விடையங்களை அப்படியே வாசகர்களுக்குத் தருகின்றேன்.

எனது மகள் சித்தி ஜஹிறா கடந்த மூன்று மாதங்களாக கொழும்பில் ஆடைத் தொழில்சாலையொன்றில் மேற்பார்வையாளராக தொழில் புரிந்து வந்தார் இந்த நிலையில் 2016-10-13ஆம் திகதி காலை 8.00 மணியளவில் எனது மகள் அவரது 0779832772 என்ற இலக்கத்தில் இருந்து தொடர்பு கொண்டு 10.000 ரூபா பணம் வங்கிக்கு அனுப்புகிறேன் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு தொலைபேசியைத் துண்டித்துக்கொண்டார். அன்று இரவு அவரின் மரணச் செய்திதான் எனக்குக் கிடைத்தது அனுப்புவதாகச் சொன்ன பணம் வங்கிக்கு வந்து சேரவும் இல்லை. என்று அவர் சொன்னார்.

சித்தி ஜஹிறாவின் சகோதரர் ஆதம்பாவா ஜெனீபர் தெரிவிக்கையில் :

2016-10-13ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு எனக்கு 0770654222 என்ற தொலைபேசி இலக்கத்தில் இருந்து அழைப்பு வந்தது அழைப்பை எடுத்தவர் உங்கள் சகோதரியை ஆபத்தான நிலையில் களுவஞ்சிக்குடி வைத்தியசாலையில் சேர்த்துள்ளேன் அவரது மருத்தவச் சாண்றிதழ்களை எடுத்துக் கொண்டு உடனடியாக வருமாறு சொன்னார் இவர் எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என்பதால் இவர் சண்முகம்; மணிமோகன் என அறிந்து கொண்டேன்.

உடனடியாக நான் எனது மோட்டார் பைக்கை எடுத்து கொண்டு 7.50 மணியளவில் களுவஞ்சிக்குடி வைத்தியசாலைக்குச் சென்றேன். அங்கு எனது சகோதரி இருக்கவில்லை கவலைக்கிடமாக உள்ளதால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவிட்டதாக வைத்தியசாலையில்; தெரிவித்தனர். நான் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்றேன் நேரம் 9.40 மணியிருக்கும்.

வைத்தியாசாலையில் விசாரித்த போது எனது சகோதரி இறந்து விட்டதாக அறிவித்தனர். பின்னர் வைத்தியசாலை பொலிஸார் என்னிடம் விபரங்களைப் பெற்றுக் கொண்டு களுவஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதியுமாறு தெரிவித்தனர். அதன் அடிப்படையில் இரவு 11.00 மணியளவில் எனது முறைப்பாட்டைப் பதிவு செய்தேன். அதன் பின்னர் 2016-10-14ஆம் திகதி அதிகாலை கல்முனை பொலிஸில் மற்றுமொரு முறைப்பாட்டையும் பதிவு செய்தேன்.

14ஆம் காலை திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்று எனது சகோதரியின் ஜனாஸாவை (சடலத்தை) பார்வையிட அனுமதி கோரினேன் பொலிஸாரின் அனுமதி இல்லாமல் பார்க முடியாது என மறுத்து விட்டனர். அதே தினம் மாலை களுவஞ்சிக்குடி பொலிஸில் இருந்து ஒரு தகவல் வந்தது 2016-10-15ஆம் திகதி காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்று பிரேத பரிசோதனையின் பின்னர் ஜனாஸாவை (சடலத்தை) பொறுபபேற்பதற்கு ஆயத்தமாக வறுமாறு அறிவித்தனர்.

அதன் பின்னர் அந்த அறிவித்தலுக்கு அமைவாக 2016-10-15ஆம் திகதி காலை களுவஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று அங்குள்ள பொலிஸ் உத்தியோகதர் ஒருவருடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்று பிரேத பரிசோதனையின் பின்னர் எனது சகோதரியின் ஜனாஸாவை (சடலத்தை) பொறுப்பேற்று அன்று மாலை மருதமுனை மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. என உயிரிழந்த சித்தி ஜஹிறாவின் சகோதரர் ஆதம்பாவா ஜெனீபர் தெரிவித்தார்.

தற்போது சந்தேக நபரான மருந்து மற்றும் மாத்திரைகள் விற்பனை முகவரான சண்முகம்; மணிமோகன் என்பவர் களுவஞ்சிக்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 14 நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -