ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி..!

னைவரது மனங்களிலும் சகவாழ்வும் நல்லிணக்கமும் மிளிரவேண்டும் என்பதே இன்றைய தீபாவளி தினத்தின் எமது பிரார்த்தனையாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டினதும் சமூகத்தினதும் சுபீட்சம் அந்த நாட்டில் நிலவுகின்ற சமாதானம் மற்றும் சகவாழ்வினாலேயே உறுதிப்படுத்தப்படுகின்றது எனவும் ஜனாதிபதி அச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டு மோதல்களும் அதனால் சமூகத்தின்மீது படர்ந்திருந்த இருளும் நீங்கிய இன்றைய சூழ்நிலையானது எமது சமூகத்தை இருளிலிருந்து ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி இட்டுச்செல்ல கிடைத்த பெறுமதியான வாய்ப்பாகுமெனக் கருதுகிறேன்.

ஒரு நாட்டினதும் சமூகத்தினதும் சுபீட்சமானது அந்த நாட்டில் நிலவுகின்ற சமாதானம் மற்றும் சகவாழ்வினாலேயே உறுதிப்படுத்தப்படுகின்றது. எனவே அனைவரது மனங்களிலும்; சகவாழ்வும் நல்லிணக்கமும் மிளிரவேண்டும் என்பதே இன்றைய தீபாவளி தினத்தின் எமது பிரார்த்தனையாக அமைய வேண்டுமென நான் கருதுகின்றேன்.

ஐக்கியமென்பது இன்றைய உலகின் இருப்புக்குத் தேவையான அடிப்படை நிபந்தனையாகியுள்ள பின்னணியில், நாம் அனைவரும் ஆழமான பிணைப்புடனும் உண்மையான புரிந்துணர்வுடனும் செயற்படுவது அவசியமாகும்.

உலகவாழ் இந்துக்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் இத் தீபத்திருநாள் அனைவருக்கும் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் ஒரு பண்டிகையாகவும் அவர்களது வாழ்வில் புத்தொளி வீசும் தீபத் திருநாளாகவும் அமைய வாழ்த்துகின்றேன் என்றும் ஜனாதிபதி தனது வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -