வெளிவாரி பட்டதாரி கற்கை நெறிக்கு பதிவு செய்யும் மாணவர்களை, மட்டுப்படுத்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிராக இளைஞர், யுவதிகள் குழுவொன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் உள்வாரியாக கல்வியைத் தொடர்ந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு சமமான மாணவர்களே வெளிவாரியாகவும் பதிவு செய்து கொள்ளலாம் எனும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தீர்மானம் உயர் கல்வி பெறும் மாணவர்களின் உரிமையை மீறும் செயல் என நேற்று (26) முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.