எம்.ஜே.எம்.சஜீத்-
ஏறாவூர் நகர பிரதேச செயலகத்துக்குட்பட்ட வறிய குடும்பங்களிருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மூன்றாம் கட்டமாக சீமந்து பக்கற்றுக்கள் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய வீடமைப்பு அதிகாரசபையால் முன்னெடுக்கப்பட்டு வரும் இத்திட்டத்தில், பயனாளிகளுக்கான சீமெந்து பக்கற்றுக்களை வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் எஸ்.எம்.எம் ஹனீபா தலைமையில் நேற்று (28) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஏறாவூர் நகர பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ் சுபையிர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சீமெந்து பக்கற்றுக்களை வழங்கி வைத்தார்.
இதன்போது 290 பயனாளிகளுக்கு சீமெந்து பக்கற்றுக்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.