யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தென் கிழக்கு பல்கலைக்கழத்தில் இன்று(24) மதியம் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதேவேளை பேராதனை பல்கலைக்கழக மாணவர்களும் குறித்த சம்பவத்திற்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது 1000இற்கும் அதிகமான மாணவர்கள் போராட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில் கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 11.30 அளவில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ்.பல்கலை மாணவர்களான 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஸன் மற்றும் 23 வயதான நடராசா கஜன் ஆகியோர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டமையை எதிர்த்து நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Pic By: Rahumathulla