மருத்துவ ஆய்வுகூட தொழிநூட்பவியலாளர்களின் பிரச்சினை தொடர்பில் அமைச்சர் நஸீர் விசேட கவனம்...!

10 வருடங்களாகியும் ஒரே இடத்தில் கடமை செய்யவேண்டியுள்ளது எனவும் இடமாற்றங்களுக்கு விண்ணப்பித்தும் எங்களுக்கான இடமாற்றங்கள் இதுவரை இடம்பெறவில்லை. இந்த இடமாற்றங்களில் பாரிய பாகுபாடுகள் காட்டப்படுவதாகவும் இதனால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று மருத்துவ ஆய்வுகூட தொழிநூட்பவியலாளர்கள் தங்களின் ஆதங்கங்களை வெளியிட்டனர்.

அத்துடன் எங்களுக்கு பிறகு நியமனங்கள் பெற்றவர்கள் சிலர் இடமாற்றங்களையும் பெற்றும் அவர்களுக்கான பதவி உயர்வுகளையும் பெற்றுச் சென்றுள்ளனர். இது எந்த விதத்தில் நியாயமாகும் என்ற கேள்வியையும் எழுப்பினர்.

அகில இலங்கை மருத்துவ ஆய்வுகூட தொழிநூட்பவியலாளர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிழக்கு மாகாண மருத்துவ ஆய்வுகூட தொழிநூட்பவியலாளர்களின் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் குறித்த ஒன்றியத்தின் தலைவர் ரவிக் குமேதேஸ் தலைமையில் நேற்றிரவு (29) மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் இல் இடம்பெற்றது. 

இக்கலந்துரையாடலின்போது கிழக்கு மாகாணத்திலுள்ள மருத்துவ ஆய்வுகூட தொழிநூட்பவியலாளர்களினால் பல பிரச்சினைகளை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரிடம் முன்வைத்தபோது இதனை தெரிவித்தனர்.

அங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை மற்றும் அம்பாறை சுகாதார சேவைகள் பணிமனையின் கீழுள்ள வைத்தியசாலைகளில் அமைந்துள்ள ஆய்வுகூடங்களுக்கு போதியளவு மருத்துவ ஆய்வுகூட தொழிநூட்பவியலாளர்கள் இல்லை எனவும் இதனால் இரிக்கின்ற நாங்கள் தங்களின் கடமை நேரங்களையும் தான்டி வேலை செய்யவேண்டியுள்ளது.

இவ்வாறு தங்களினால் செய்யப்படுகின்ற மேலதிக கடமை நேரங்களுக்கான கொடுப்பனவுகளும் கடந்த பல மாதங்களாக எங்களுக்கு கிடைக்கவில்லை. எங்களுக்கு கிடைக்கவேண்டிய மேலதிக கடமை நேர கொடுப்பனவுகளை வழங்கி வைக்க உடனடி நடவடிக்கையினையும் எடுக்கவேண்டும் என்றும் கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் நிலவுகின்ற மருத்துவ ஆய்வுகூட தொழிநூட்பவியலாளர்களின் வெற்றிடங்களுக்கு ஆளணியினை அவசரமாக நியமித்துத்தர வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்தனர்.

இதற்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் நிலவுகின்ற குறைபாடுகளையும் உங்களின் பிரச்சினைகளை நான் அறிவேன். இவைகள் எல்லாவற்றையும் பார்க்கவேண்டிய தேவை எனக்குள்ளது. இவற்றை எல்லாம் ஒரே தடவையில் செய்து முடிப்பதென்பது சுலபமான காரியமல்ல. இவற்றை கட்டம் கட்டமாகத்தான் செய்து முடிக்கவேண்டும்.

10 வருடங்களுக்கு மேலாக ஒரே இடத்தில் கடமை செய்கின்றவர்களின் இடமாற்றத்தையும், நீங்கள் மேலதிக கடமை செய்த நேரக் கொடுப்பனவுகளையும் மிக விரைவில் வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்கின்றேன். அத்துடன் உங்களுக்கான பதவி உயர்வுகள் தொடர்பாக அமைச்சின் செயலாளர் மற்றும் அது உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி அதற்கான தீர்வுகளையும் மிக விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

அத்துடன் மருத்துவ ஆய்வுகூட தொழிநூட்பவியலாளர்களின் ஆளணி தொடர்பாக சுகாதார அமைச்சர் ராஜிதவுடன் பேசி அதற்கான தீர்வையும் பெற்றுத்தருவேன். அவர்களினால் முன்வைக்கப்பட்ட சில பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்கி வைக்கப்பட்ட இதேவேளை சில வற்றுக்கு தீர்வு பெற்றுத்தரப்படும் என்று சுகாதார அமைச்சரினால் வாக்குறுதியும் வழங்கி வைக்கப்பட்டன. 







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -