திருமணத்தின் பின்னர் தனது மனைவியை வீட்டுக்கு அழைத்து வரும் இடைநடுவே கணவர், மாரடைப்பால் மனைவியின் தோளில் உயிரிழந்துள்ள சோக சம்பவம் ஒன்று இப்போகமையில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர் 25 வயதான இப்போகம பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் என தெரியவந்துள்ளது.
திருமண நிகழ்வின் பின்னர் திருமண ஜோடி, புகைப்படம் எடுத்த பின்னர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது குறித்த கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
பின்னர் அவர் அவிஸாவளை மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த இருவரும் காதலில் ஈடுபட்ட நிலையில் கடந்த 6 ஆம் திகதி, பெற்றோர்களின் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.