இலங்கையில் இருந்து இயங்கும் தனியார் தொலைக்காட்சியான சக்தி டீ.வி தனது 18வது வருட கொண்டாடத்தை அதன் காரியாலத்தில் ஒழுங்கு செய்து நடாத்திய போது அங்கு பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றது.
குறித்த பூஜை வழிபாட்டின் போது அங்கு முஸ்லிம்களின் புனித நூலான குர் ஆணை வைத்து பூஜை இடம்பெற்றதால் பெரும் சர்ச்சையை உண்டுபன்னியதையடுத்து சக்தி ரீ.வி இது தொடர்பாக முஸ்லிம்களிடம் பகிரங்க மண்ணிப்புக்கோர வேண்டும் என்று முஸ்லிம்களும், முஸ்லிம் அமைப்புக்களும் பகிரங்கமாக வேண்டிக்கொண்டனர். மேலும், இவ்வாறான பிழைகளில் ஈடுபடும் சக்தி தொலைக்காட்சி இவ்வாறு முஸ்லிம்களை இழிவுபடுத்தும் செயற்பாடுகளில் இருந்து தவிர்ந்துகொள்ளவேண்டும் என்பதுடன் இவ்வாறு முஸ்லிம்களை இழிவுபடுத்து தொலைக்காட்சி, வானொலிகளினால் மக்கள் இங்கு பெரும் பாத்திப்படைகின்றனர்.
இதற்கெல்லாம் காரணம் சில முஸ்லிம்கள் அதாவாது நேயர்கள் அந்த வானொலி தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கும் ஆதரவுகளால் இவர்களுக்கு எது எப்படி செய்வது என்றே தெரியாமலே உள்ளது
அத்துடன் இவ்வாறான தொலைக்காட்சிகள், வானொலிகள் பகிரங்கமாக செய்யும் பிழைகளைகளுக்கு இவர்கள் மன்னிப்புக்கோருவதும் குறைவாகவே உள்ளது. இவர்கள் பகிரங்க மன்னிப்புக்கோர வேண்டும் என்பதுடன் இது தொடர்பில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா மற்றும் ஏனைய இஸ்லாமிய அமைப்புக்கள் இவர்களுக்கு எதிராக பத்வா வழங்குவது அவசியம்.