எப்.முபாரக்-
திருகோணமலை கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகள் இன்றி பெரிதும் சிரமப்படுவதாக கால்நடை வளர்ப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கந்தளாய் பிரதேசத்தின் வான்எல,சீனிபுர,வட்டுக்கச்சி, ஜயந்திபுர மற்றும் பேரமடுவ,போன்ற பகுதிகளில் அதிகளவான கால்நடைகள் காணப்படுகின்ற போதிலும் அவைகளுக்கான மேய்ச்சல் தரைகள் திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெயில் மற்றும் வரட்சி காரணமாக கால்நடைகளுக்கான புற்தரைகள் கருகி மஞ்சல் நிறத்தில் காணப்படுவதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் கால்நடைகள் பச்சை புற்தரைகளைத்தேடி நீண்ட தூரம் செல்வதாகவும், மாடுகளுக்கான நீர் நிலைகள்ளும் வற்றிக் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தில் பால் உற்பத்தி அதிகளவாக கிடைக்கின்ற பகுதியில் கந்தளாய் பிரதேசமே அதிகளவாக காணப்பட்ட போதிலும் தற்போது வரட்சியும்,வெயிலும் காரணமாக பால் உற்பத்தி மிகத்குறைந்தளவிலே காணப்படுவதாகவும் கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனார். இப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக மாடுகளுக்கு ஒழுங்கான உணவின்றியும், நீரின்றியும் காணப்படுவதால் கால்நடைகள் இறந்தும் வருவதாகவும் கால்நடைகள் வளர்ப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.