எப்.முபாரக்-
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் 59ம் கட்டைப் பகுதியில் வைத்து , சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் ரயர் திடிரென வெடித்ததினால் முச்சக்கர வண்டி வீதியை விட்டு விளகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று செவ்வாய்கிழமை (18) காலை 7.30 மணியளவில் இடம் பெற்ற இச்சம்பவத்தில் பொலனறுவைப் பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்களே இதன் போது படுகாயமடைந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.