சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் பல நிகழ்வுகள்..!

யு.கே.காலித்தீன்,எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
சிரியர்கள் மாணவர்களால் இனிப்புகள் வழங்கி வரவேற்கப்பட்டதுடன் ஆசிரியர்களுக்கான இலவச மருத்துவமுகாமொன்றும் இன்று ( 6 ) கல்லூரி அதிபர் பி.எம்.எம்.பதுறுதீன் மற்றும் பழைய மாணவ சங்கத்தின் செயலாளர்,பொறியியலாளர் எம்.ஸி. கமால் நிஷாத் ஆகியோரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க கல்முனைபிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரிஎன். ஆரிப் தலைமையில் இடம்பெற்றது.இம் மருத்துவ முகாமில் கல்லூரியின் பழைய மாணவர்களான டாக்டர் ஏ.எல்.எம்.பாறூக் , எம்.ஏ.ஸி.எம்.அனஸ் , எம்.எம்.அல் அமீன் றிஸாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கல்லூரி ஆசிரியர்கள் பங்கேற்ற மெதுவான துவிச்சக்கரவண்டியோட்டம். மெதுவான மோட்டார் சைக்கிளோட்டப் போட்டி , கயிறுழுத்தல், வலைக்குள் பந்து போடுதல், கிறிக்கட் போட்டி என்பன இடம்பெற்றதுடன் ஆசிரியர்களுக்கான பாராட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதே வேளை கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் கொழும்பு கிளையினரால் சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்லூரியில் கற்பித்து ஓய்வுபெற்று கொழும்பில் வசிக்கும் ஆசிரியர்களின் வீடு வீடாகச் சென்று இலவச மருத்துவ பரிசோதனை செய்துசிகிச்சையளிக்க இருப்பதாக கொழும்பு கிளையின் தலைவர் பொறியியலாளர் எம்.எம்.மைஸான் தெரிவித்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -