பிரதமர் நாட்டுக்கு வந்தவுடன் ஆசிரியர் நியமனம் தொடர்பில் பேசவுள்ளோம் - கிழக்கு முதலமைச்சர்

எப்.முபாரக்-
'பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு வருகைதந்தவுடன் ஆசிரிய நியமனங்கள் பற்றி அவருடன் பேசவுள்ளோம். அவருடன் பேசி எமது மாகாண நியமனத்துக்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம்' என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்தார்.

கல்வியற் கல்லூரியில் இருந்து வெளியாகி கடந்த செவ்வாய்க்கிழமை (04) கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தினால், ஆசிரிய நியமனம் பெற்ற கிழக்கு மாகாணத்தைச் சார்ந்தவர்கள், தம்மை தமது மாகாணத்துக்கு நியமிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

கிழக்கு மாகாண சபையின் 64ஆவது அமர்வு திருகோணமலை பேரவை செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (06) நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நூற்றுக்கணக்கான கல்வியற் கல்லூரிகளில் கற்கைநெறிகளைப் பூர்த்திசெய்து நியமனம் பெற்றவர்கள் சபை முன்றலில் திரண்டிருந்தனர்.

தாம் அனைவரும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதும் ஏனைய மாகாணங்களுக்குத் தாம் நியமிக்கப்பட்டதாக தெரிவித்ததுடன் வினயமாக இதற்கான நடவடிக்கையை எடுக்க முதலமைச்சர் ஹாபீஸ் நஸீரைக் கோரினர்.

சபை நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயம் இடையில் வருகைதந்த முதலமைச்சர் அவர்களைச் சந்தித்து பேசினார்.

இதன்போது கருத்து வெளியிட்ட ஆசிரியர்கள்

கிழக்கு மாகாணத்தில் 5,022 ஆசிரிய வெற்றிடங்கள் காணப்படும் சூழலில் எம்மில் வெறும் 194 பேர வரையே நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், நூற்றுக்காணோரை வெளி மாகாணங்களுக்கு நியமித்துள்ளனர்.

எனவே மாகாண கல்வி அமைச்சரும் நீங்களும் எமது நிலமையைக் கருத்தில் கொண்டு எமது மாகாணத்தில் நாம் பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்தனர்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர்:

நானும் எமது கல்வி அமைச்சரும் நாளை கொழுப்புக்குச் செல்கின்றோம். எமது பிரதமர் வெளிநாட்டில் இருந்து வருகைதந்தவுடன் அவருடன் பேசி எமது மாகாண நியமனத்துக்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என உறுதியளித்தார்

கல்வியற் கல்லூரிகளில் கற்கைநெறிகளைப் பூர்த்திசெய்து வெளியேறிய 3,225பேருக்கு, கடந்த செவ்வாயக்கிழமை (04) கொழுப்பில் வைத்து நியமனங்கள் வழங்கப்பட்டன. இவர்களில் தமிழ் மொழி மூலமானவர்கள் 1,014 பேராகும். இவர்களில் 194 பேரே கிழக்கு மாகாணத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -