அகமட் எஸ்.முகைடீன், ஹாசிப் யாஸீன்-
பேருவளை சீனங்கோட்டை அல் - ஹூமைசறா தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்புவிழா பாடசாலையின் எஸ்.எம்.ஐhபீர் ஹாஐpயார் ஞாபகார்த்த மண்டபத்தில் இன்று (25)செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எம்.ஆர்.எம். றிஸ்கி தலைமையில் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகவிளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாககலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக மேல் மாகாண சபை உறுப்பினர் இப்திகார் nஐமீல்,பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் அல்-ஹாஐ; எம்.எம்.எம்.மிஸ்வர், பாடசாலைபழைய மாணவர் சங்கத் தலைவர், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்ள்,மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது 2016ம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 150 இற்கு மேற்பட்டபுள்ளிகளைப் பெற்ற மாணவர்கள், கல்வி மற்றும் புறக்கீர்த்திய செயற்பாடுகளில் சாதனைபடைத்த மாணவர்கள் ஆகியோருக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிகௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலை அதிபர் மற்றும் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் வேண்டிக் கொண்டதற்குஅமைவாக குறித்த பாடசாலைக்கு நீச்சல் தடாகம் மற்றும் மைதான அபிவிருத்தியினைஅடுத்த ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைத்துத் தருவதாக விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் இதன்போது வாக்குறுதியளித்தார்.