எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் 13 ஆம்திகதி முதல் 17 வரை கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைக்கும் நிகழ்வுஇன்று கல்லூரியில் இடம்பெற்றது.
இணைப்பாட விதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் ஏ.பி.முஜீன் உள்ளிட்ட பாடசாலை அபிவிருத்தி சபைச்செயலாளர் நில அளவையாளர் எம்.ஏ.றபீக், உதவி அதிபர் எம்.ஏ.சலாம், சிரேஸ்ட ஆசிரியரும் விளையாட்டுக்குழு (நிர்வாகம்) செயலாளருமான எம்.ஐ.எம்.அஸ்ஹர், கல்லூரி உடற்கல்வித்துறை பொறுப்பாசிரியரும் பயிற்றுவிப்பாளருமான ஏ.எம்.அப்ராஜ் ரிலா, உடற்கல்வித்துறை ஆசிரியரும் விளையாட்டுக்குழு (விளையாட்டு )செயலாளருமான எம்.எஸ்.எம்.நுபைஸ் , ஒழுக்காற்று சபைத் தலைவரும் உடற்கல்வித்துறை ஆசிரியருமான யு.எல்.எம்.இப்றாஹிம் ஆகியோர் மாணவர்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டி அண்மையில் திருகோணமலை கந்தளாய் லீலாரெட்ன மைதானத்தில் இடம்பெற்றபோது கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர்கள் 20 தங்கப்பதக்கங்களையும், 04 வெள்ளிப்பதக்கங்களையும், 02 வெண்கலப்பதக்கங்களையும் பெற்று மீண்டும் ஒரு வரலாற்று சாதனைபடைத்திருந்தனர்
அத்துடன் 7 கிழக்கு மாகாண மட்ட சாதனைகள் முறியடித்ததுடன் ஆண்கள் பிரிவில் அஞ்சலோட்டசம்பியன்களாகவும் , அதிக புள்ளிகளைப் பெற்ற கல்லூரியாகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.