மன்னார் அடம்பன் பள்ளிவாசல்பிட்டி தாருல் ஹிகம் அல் – அஷ்ரப்பிய்யா அரபுக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் குலபாஉர் - ராஷிதீன் பள்ளிவாசல் திறப்பு விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை 14 ஆம் திகதி காலை 11 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
வடமாகாண மஜ்லிஸூஸ் ஷூராவின் தலைவர் மௌலவி எஸ்.எச்.எம்.ஏ (முபாரக்) தலைமையில் இடம்பெறும் இந்தத் திறப்புவிழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் கௌரவ விருந்தினர்களாக மாகாண அமைச்சர் டெனீஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான நவவி, இஷாக், மற்றும் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், பொறியியலாளர் ஜௌபர் இஸ்மாயீல், டொக்டர் சனீக் ஆகியோர் பங்கேற்கின்றனர்.